ARTICLE AD BOX
கோவை ஆர் எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் வரவு செலவு கணக்குகளை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அந்நிறுவனத்தை நடத்தி வரும் கலைவாணி என்பவர் ராஜனுடைய வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் அவர் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய்க்கு முறைகேடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து கலைவாணி கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், சாலை பணிகளை மேற்கொள்ளும் தனது ஒப்பந்த நிறுவனம் மூலம் கோவை பகுதிகளில் உள்ளாட்சிகளில் சாலை பணிகளுக்கான ஒப்பந்தத்தை பெற்று தொண்டாமுத்தூர், பேரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலை பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தனது நிறுவனத்தில் ஆர் எஸ் புரத்தை சேர்ந்த ராஜன் என்பவர் வரவு செலவு கணக்குகளை பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்புகாரில், ராஜன் சாலை பணிகளுக்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக பணம் அனுப்புவது, உள்ளாட்சி சாலை பணிகள் முடிந்ததும் பணம் பெறுவது போன்ற பணிகளை செய்து வந்ததாகவும் இதனிடையே இவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு இவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் ஒரு கோடியே 11 லட்சம் முறைகேடு செய்திருப்பது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ராஜனை விசாரித்ததில் ரூ.33 லட்சத்திற்கு மட்டுமே கணக்கு காட்டியதாகவும் ரூ.78 லட்சம் பணத்தை மனைவி மற்றும் குடும்பத்தினர் வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்ததாகவும் தெரிய வந்ததாம். இந்த நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராஜன் மோசடி செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் போலீஸார் ராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன் பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்செய்தி அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 months ago
32









English (US) ·