ARTICLE AD BOX

சென்னை சாலையில் தோட்டாக்களுடன் கிடந்த ஏகே 47 துப்பாக்கியைக் கண்டெடுத்து, போலீசில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை: சென்னை மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே, இன்று ஏகே 47 ரக துப்பாக்கியின் குண்டுகள் சாலையில் கிடந்துள்ளது. அது மட்டுமல்லாமல், அந்தத் துப்பாக்கியில் பொருத்தும்படி, அதற்கான மேகஸின் கவரில் லோடு செய்யப்பட்டு இருந்துள்ளது.
இதனையடுத்து, இந்த குண்டுகளை, தாம்பரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்ற இளைஞர் கண்டெடுத்துள்ளார். தொடர்ந்து, இது தொடர்பாக ராமாபுரம் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, துப்பாக்கி குண்டுகளைக் கைப்பற்றிய போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த விசாரணையில், அந்த குண்டுகள் சிஆர்பிஎஃப் படை வீரர்களுக்குச் சொந்தமான துப்பாக்கி குண்டுகள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணையில், பூந்தமல்லி சிஆர்பிஎப் கம்பெனியில் இருந்து ஆளுநர் மாளிகை பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையினர் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் பட வில்லன் நியூயார்க்கில் திடீர் கைது… துருவி துருவி விசாரணை.!!
அப்போதுதான் ஏகே 47 மேகஸின் மற்றும் 30 தோட்டாக்கள் வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்தது தெரிய வந்துள்ளது. இதன்படி, துப்பாக்கிக் குண்டுகளை சிஆர்பிஎப் படை வீரர்களிடம் ஒப்படைத்த ராமாபுரம் போலீசார், பொறுப்புடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த இளைஞர் சிவராஜை வெகுவாகப் பாராட்டினர்.
The station சாலையில் 30 தோட்டாக்களுடன் கிடந்த ஏகே 47.. இளைஞருக்கு குவியும் பாராட்டு! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.