ARTICLE AD BOX

தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமியின் கணவரை சரமாரியாக தாக்கியதில் அவரது தலையில் 25 தையல்கள் போடப்பட்டுள்ளது
தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமி. இவரது கணவர் கணேசன் (48). இவர்கள் வேப்பம்பட்டு, பெரியார் நகர், எம்ஆர்கே தெருவில் வசித்து வருகின்றனர்.
இவர்களது வீட்டின் அருகில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது உறவினர் இறந்து விட்டதால் அதற்கான காரிய நிகழ்ச்சி நடந்தது. இந்த காரிய நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட இலைகளையும், குப்பைகளையும் கொண்டு சென்று கொட்டியுள்ளனர்.
இதனைப் பார்த்த கி.வீரலட்சுமியின் கணவர் கணேசன் எதற்காக என் வீட்டின் அருகே சாப்பிட்ட இலைகளை கொட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது வாய் தகராறு ஏற்பட்டு கணேசனை கட்டையால் தலையில் அடித்துள்ளனர்.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த கணேசனை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 25 தையல்கள் போடப்பட்டது.
பிறகு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து செவ்வாபேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களான மணிகண்டன், பாஸ்கர், லட்சுமணன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The station சாவு வீட்டில் வீரலட்சுமி கணவர் மீது சரமாரி தாக்குதல்… மண்டை உடைந்து 25 தையல்..!! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.