ARTICLE AD BOX
கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வர் 8ம் தேதி இரவு கரூர் வருகை தந்தார்.
இதையும் படியுங்க: 70 வயதிலும் 3வது மனைவி… இளைஞருடன் படுக்கையை பகிர்ந்த மனைவி கொலை!
9ம் தேதி காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், மாலை 6 மணி அளவில் கரூர் ராயனூர் தளபதி திடலில் கரூர் மாவட்ட திமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளான, பூத் கமிட்டி இளைஞர் அணி, மகளிர் அணி, பூத் கமிட்டி பிஎல்சி, 2 என 16 ஆயிரம் பேர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நிர்வாகிகளிடையே ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். சுமார் ஆறு மணிக்கு துவங்கிய ஆலோசனைக் கூட்டம் 8 மணி வரை நடைபெற்றது.
இந்த ஆலோசனையில் கலந்து கொண்ட 16 ஆயிரம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் விழா மேடை பின்பு சுமார் 4000 பேர் அமர்ந்து உணவு அருந்தக்கூடிய பெரிய திடல் அமைக்கப்பட்டு, அதில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மட்டன் வருவல், சிக்கன் வருவல், நாட்டுக்கோழி உப்பு கறி, மட்டன் கோழி குழம்பு உள்ளிட்ட ஒன்பது வகையான அசைவ விருந்து வழங்கப்பட்டது.
சுமார் எட்டு மணிக்கு துவங்கிய இந்த அசைவ விருந்து இரவு 12 மணி வரை நடைபெற்றது. முண்டியடித்துக் கொண்டு அமர்ந்து உணவு அருந்திய நிர்வாகிகள் சென்ற நிலையில், பின்பு அருகில் உள்ள திருமாநிலையூர், ராயனூர், தாந்தோன்றிமலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாநாட்டு திடலில் நடைபெற்ற அசைவ விருந்தில் கலந்து கொண்டு இரவு 12 மணி வரை உணவு அருந்தி மகிழ்ந்து சென்றனர்.
திமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது வகையான அசைவ விருந்து வழங்கப்பட்டது ஆச்சரியத்துடனும் உணவு அருந்தி வியந்து சென்றது குறிப்பிடத்தக்கது.