சிதறிக் கிடந்த உடல்.. இளைஞர் கொடூர கொலை : போதையால் கொலை நகரமாகும் தலைநகராம்!!

3 months ago 116
ARTICLE AD BOX
Chennai Pourur Youth got stagger successful  Kanja Sale

தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தற்போது சென்னையில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் தலைநகரம் கொலை நகரமாக மாறி வருகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னை போரூரை அடுத்த ஐயப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த தமிழ் என்ற நபர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்கு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தமிழ் மற்றும் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சபரி என்ற ரவுடிக்கு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று, தமிழ் தனது வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது, இதை அறிந்த சபரி, தனது கூட்டாளிகளுடன் ஐந்து இருசக்கர வாகனங்களில் அங்கு வந்துள்ளார். தனியாக நின்ற தமிழை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் நேரடியாக தாக்கியுள்ளனர்.

இதில், தமிழ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர், சபரியின் குழு இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளது.

செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த கார்கள் மற்றும் பைக்குகளையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளில், அவர்கள் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் செல்லும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த தமிழை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போரூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The station சிதறிக் கிடந்த உடல்.. இளைஞர் கொடூர கொலை : போதையால் கொலை நகரமாகும் தலைநகராம்!! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article