ARTICLE AD BOX
காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி. இவருடைய மனைவி சுமதி.
இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பின்பக்கம் துளசியின் அண்ணன் சுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இதையும் படியுங்க: எங்கடா போறீங்க…கேமராவ பிடுங்கி எறியுறேன்.. பத்திரிகையாளர்களை தகாத வார்த்தையால் திட்டிய வைகோ!!
இரு குடும்பத்திற்கும் ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணியனின் மகன் துரை, தனது வீட்டிற்கு முன்பு நின்றிருந்த சித்தி சுமதியை இன்று காலை சுமார் 7 மணி அளவில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கொண்டிருந்த சுமதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சுமதி ஏற்கனவே இறந்து விட்டார் என்றதையடுத்து உடற்கூறு பரிசோதனைக்காக சுமதின் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் துளசி மற்றும் சுப்பிரமணியன் சகோதரர்களின் காலியிடம் அங்கு உள்ளது .
அதனை கைப்பற்ற இரண்டு குடும்பத்தினர்களுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்படுவது வாடிக்கை. அந்தப் பிரச்சினை தற்போது கொலையில் முடிந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சொத்துக்காக தன்னை வளர்த்த சொந்த சித்தியையே கொலை செய்த சம்பவம் நல்லூர் கிராமத்தில் மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கியது.
கடந்த சில தினங்களில் இரண்டு பெண்கள் காஞ்சிபுரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது காஞ்சிபுரத்தில் காவல்துறையினரின் செயல்பாட்டை தோலுரித்துக் காட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.