ARTICLE AD BOX
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில் அறிமுகமானாலும் முதலில் ரிலீஸ் ஆனது அறிந்தும் அறியாமலும். இரண்டு படமும் ஆர்யாவுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
தொடர்ந்து சாக்லேட் பாயாக நடித்த ஆர்யா, நான் கடவுள் படம் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிகாட்டினார். இந்த படம் தேசிய விருதும் பெற்றது.
இதையும் படியுங்க: விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!
பின்னர் அவன் இவன், மதராசப்பட்டினம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்த அவர், இடையில் கமர்ஷியலான படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.
சமீபத்திய ஹிட் கொடுத்த படம் என்றால் சார்ப்பட்டா பரம்பரை. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவருக்கு சரியான வெற்றி அமையவில்லை. தற்பேது மிஸ்டர் X மற்றும் சார்ப்பட்டா பரம்பரை 2ஆம் பாகத்தில் நடித்து வருகிறார்.
கஜினிகாந்த், காப்பான், டெடி போன்ற படங்களில் நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆர்யாவுக்க ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஒரு படத்துக்கு 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கும் ஆர்யா, பிசினஸ் மூலம் மாதம் ரூ.2 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

இது மட்டுமல்லாமல் சீ ஷெல் என்ற உணவகத்தை நடத்தி வந்தார் ஆர்யா. சென்னையில் மட்டும் அண்ணா நகர், வேளச்சேரியில் இந்த கடையை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அந்த கடைகளில் இன்று காலை திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த கடை என்னுடையது அல்ல, அந்த கடையை வேறு நபருக்கு 2 வருடங்களுக்கு முன் விற்று விட்டேன் என ஆர்யா விளக்கமளித்துள்ளார்.
