ARTICLE AD BOX
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா வடக்கு மும்பையான கன்டிவலியில் உள்ள காவலநிலையத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார்.
இதையும் படியுங்க: மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!
அதில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி பிரபல நடிகர் அஜாஸ் கான் என்னை பலமுறை பாலயில் வன்கொடுமை செய்துள்ளதாக பகீர் புகார் கூறினார்.
இதையடுத்து நடிகர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நடிகர் அஜாஸ் கான் மீது ஏற்கனவே ஹவுஸ் அரெஸ்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் இருப்பதாக பலர் புகார் அளித்திருந்தனர்.
இந்த சர்ச்சையே இன்னும் அடங்காத நிலையில், பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.