சினிமாவில் களமிறங்கப்போகும் உதயநிதியின் மகன்? அதுவும் இந்த டாப் இயக்குனர் படத்துலயா?

1 month ago 25
ARTICLE AD BOX

உதயநிதியின் வாரிசு!

“குருவி” திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியவர்தான் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின். அதனை தொடர்ந்து “ஓகே ஓகே”, “நண்பேன்டா” போன்ற திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார். அதன் பின் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நடிகராக உயர்ந்தார். 

எனினும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அமைச்சராக பதவியேற்றார். அவர் அமைச்சராக பதவியேற்றதில் இருந்து சினிமாவில் இருந்து விலகிக்கொண்டார். அதன் பின் அவருக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் நிறுவனத்திலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. கடந்த 2024 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டின் துணை முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். 

ஹீரோவாக களமிறங்கும் இன்பநிதி!

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் மகனான இன்பநிதி ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம். அதுவும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

Inbanithi stalin introducing as a hero in mari selvaraj movie

2005 ஆம் ஆண்டு பிறந்த இன்பநிதிக்கு தற்போது 20 வயது ஆகிறது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  • Inbanithi stalin introducing as a hero in mari selvaraj movieசினிமாவில் களமிறங்கப்போகும் உதயநிதியின் மகன்? அதுவும் இந்த டாப் இயக்குனர் படத்துலயா?
  • Continue Reading

    Read Entire Article