சினிமாவில் வாய்ப்பில்லை? பிரபல சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய நடிகை கிரண்…

1 month ago 9
ARTICLE AD BOX

குக் வித் கோமாளிக்கு போட்டியாக இறங்கிய சன் டிவி?

சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் “குக்கு வித் கோமாளி” நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த 2024 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சி நிறுவனம் “டாப் குக்கு டூப் குக்கு” என்ற சமையல் நிகழ்ச்சியை தொடங்கியது. 

விஜய் தொலைக்காட்சியின் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியை தயாரித்து வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் சன் தொலைக்காட்சிக்குத் தாவியது. அந்த வகையில்தான் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியை போலவே ஒரு நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியாக “டாப் குக்கு டூப் குக்கு” என்ற நிகழ்ச்சியை தயாரிக்கத் தொடங்கியது. இதன் முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இதன் இரண்டாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. 

Actress kiran participe in top cooku dupe cuckoo season 2

போட்டியாளராக களமிறங்கும் கிரண்…

இந்த நிலையில் “டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2” நிகழ்ச்சியில் பிரபல நடிகை கிரண் போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. நடிகை கிரண் ஒரு காலகட்டத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவருக்கு மார்க்கெட் குறைந்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துப்போனது. 

Actress kiran participe in top cooku dupe cuckoo season 2

சமீப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். இந்த நிலையில்தான் இவர் “டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

  • Actress kiran participe in top cooku dupe cuckoo season 2சினிமாவில் வாய்ப்பில்லை? பிரபல சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய நடிகை கிரண்…
  • Continue Reading

    Read Entire Article