சினிமாவுக்காகவே பங்களா கட்டிய நடிகர் ராஜேஷ்! இப்படி எல்லாம் செய்திருக்காரா இவர்? 

1 month ago 30
ARTICLE AD BOX

திடீர் மரணம்

பாலச்சந்தர் இயக்கிய “அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஜேஷ். அதனை தொடர்ந்து “அந்த 7 நாட்கள்”, “தனிக்காட்டு ராஜா” போன்ற பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். “மகாநதி” திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. 

actor rajesh passed away today morning in the middle of the route to hospital

இவர் ஒரு சிறந்த டப்பிங் கலைஞரும் கூட. மலையாள நடிகர்களான முரளி, நெடுமுடி வேணு ஆகியோருக்கு தமிழில் டப்பிங் கொடுத்தும் உள்ளார். இந்த நிலையில் இன்று காலை மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவரை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கம்யூனிசம் டூ ஜோதிடம்

நடிகர் ராஜேஷ் கம்யூனிச சிந்தாத்ததில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஒரு முறை இங்கிலாந்தில் உள்ள கார்ல் மார்க்ஸ் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு ஜோதிடத்திலும் மிகுந்த ஆர்வம் கொள்ளத்தொடங்கினார். சமீப காலமாக “ஓம்சரவண பவ” என்ற யூட்யூப் சேன்னலை நடத்தி வந்தார் ராஜேஷ். 

actor rajesh passed away today morning in the middle of the route to hospital

இதனிடையே இவர் 1985 ஆம் ஆண்டு சென்னை கே கே நகரில் சினிமா படப்பிடிப்பிற்காகவே ஒரு பங்களா வீட்டை கட்டினார். அதனை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார். அந்த பங்களாவில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்திருக்கின்றன. ஆனால் 1993 ஆம் ஆண்டு அந்த அவர் அந்த பங்களாவை விற்றுவிட்டார். 

அதன் பிறகுதான் அவர் ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்ற தொழில்களில் இறங்கினார். இந்த நிலையில் இவர் இன்று காலை ராஜேஷ் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

  • actor rajesh passed away today morning in the middle of the route to hospital சினிமாவுக்காகவே பங்களா கட்டிய நடிகர் ராஜேஷ்! இப்படி எல்லாம் செய்திருக்காரா இவர்? 
  • Continue Reading

    Read Entire Article