ARTICLE AD BOX
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி…
அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா விழாக்களிலும் கலந்துகொள்ளவில்லை. அவர் நடித்த திரைப்படங்களின் புரொமோஷன்களுக்கு கூட அவர் வந்ததில்லை. இந்த நிலையில்தான் சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் நடிகர் அஜித்குமார்.

சினிவுக்கு ஓய்வு?
மிக நீண்ட பேட்டியான அதில் அஜித்குமார் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் சினிமா கெரியர் குறித்தும் பல விஷயங்களை பேசியுள்ளார். இந்த நிலையில் அப்பேட்டியில் அவர், “நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையை பற்றி குறைகூறுகிறார்கள். காலை எழுந்து உயிருடன் இருப்பதே பெரிய வரம்தான்” என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அஜித், “எனக்கு அறுவை சிகிச்சைகள் பல நடந்துள்ளன. புற்றுநோயில் இருந்து குணமடைந்த நண்பர்கள் பலர் எனக்கு இருக்கின்றனர். வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நாம் அறிவோம். இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் நான் பயன்படுத்த விரும்புகிறேன்” எனவும் அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
