ARTICLE AD BOX
விஜய்யின் கடைசித் திரைப்படம்
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். கடந்த ஜூன் 22 விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளிவந்தது. இந்த கிளிம்ப்ஸ் விடியோவில் விஜய் போலீஸ் உடையில் தோன்றினார். இதன் மூலம் இத்திரைப்படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தெரிய வந்துள்ளது.
தனது 69 ஆவது திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம்தான் தனது கடைசித் திரைப்படம் என அறிவித்தார் விஜய். இத்திரைப்படத்தை அடுத்து தன்னை முழு நேர அரசியலில் ஈடுபடுத்திக்கொள்ளப்போவதாகவும் விஜய் அறிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களை ஒரு பக்கம் சோகத்தில் ஆழ்த்தினாலும் மக்கள் சேவை செய்ய நமது தளபதி கட்சித் தொடங்கியுள்ளது அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. வருகிற 2026 ஆம் ஆண்டு விஜய்யின் தவெக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் விஜய் பல அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
திரும்பவும் நடிக்க வருவேன்?
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட நடிகை மமிதா பைஜு, “ படப்பிடிப்புத் தளத்தில் விஜய் சாரிடம் இதுதான் உங்கள் கடைசித் திரைப்படமா? என கேட்டேன். அதற்கு அவர், 2026 சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளை பொறுத்து நடிப்பதா? வேண்டாமா? என முடிவெடுப்பேன் என பதிலளித்தார்” என்று விஜய் கூறியதை பகிர்ந்துகொண்டார்.
“இனி சினிமாவிற்கே வரமாட்டேன், முழு நேர அரசியலில்தான் ஈடுபடுவேன்” என சபதம் எடுத்த விஜய், மமிதா பைஜுவிடம் இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாக தெரிய வருகிறது. “அப்போது விஜய் பேசியதெல்லாம் பொய்யா?” என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மமிதா பைஜு “ஜனநாயகன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.