ARTICLE AD BOX
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் என்பவரின் மகன் பாரத் (36). இவர் சென்னை தாம்பரத்தில் குடும்பத்தோடு தங்கி உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
விடுமுறைக்க ஊருக்கு வந்த அவர் நேற்று (21.07.2025) இரவு குருவராஜபாளையம் பகுதியில் உள்ள கடைக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வீடு திரும்பும் போது சாலையில் போடப்பட்டிருந்த தென்னை மட்டையினால் நிலைத்திடுமாறு கீழே விழுந்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த அடையாளம் தெரியாத கும்பல் பாரத்தை அவரது மனைவி மற்றும் சிறுமியான மகள் கண் முன்னே சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே பாரத் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த வேலூர் மாவட்ட Sp மயில்வாகனன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
மேலும் தடயவியல் நிபுணர் குழுவினர், மோப்ப நாய் சாரா உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டனர். பின்னர் வேப்பங்குப்பம் காவல்துறையினர் உயிரிழந்த பாரத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
