ARTICLE AD BOX
சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு காணாமல் போய்விடுவர்.
இதையும் படியுங்க: நாங்க லெஸ்பியன்..? விஜய் டிவி சீரியல் நடிகைகள் மாறி மாறி தாலி கட்டிய ஷாக் வீடியோ!
ஒரு சிலர் திருமணத்திற்கு பிறகும், குழந்தைகள் பெற்ற பிறகும் தொடர்ந்து அக்கா, அம்மா,அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை திரிஷா கிட்டத்தட்ட 23 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். அதுவும் டாப் நடிகையாக உள்ளார். 75 படங்களுக்கு மேல் ஹீரோயினாகவே நடித்து வலம் வருகிறார்.
இவருக்கு வருண் மணியன் என்ற தயாரிப்பாளருடன் 2015ல் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை. இதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் பேசிய திரிஷா, திருமணத்திற்கு பின் சினிமாவை நிறுத்த வேண்டும் என கூறியதால், நான் திருமணத்தை நிறுத்திவிட்டேன் என கூறியுள்ளார்.
அதே போல சினிமாதான் எனக்கு எல்லாமே, சினிமாவை விட்டு எப்போதும் விலக மாட்டேன், திருமணமான பின், கர்ப்பம் ஆனால் மட்டும் தற்காலிக ஓய்வெடுப்பேனே தவிர, சினிமாவை விட்டு விலகவே மாட்டேன் என கூறியுள்ளார்.

5 months ago
56









English (US) ·