ARTICLE AD BOX
தருமபுரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் ஒகேனக்கல்லில் மூன்று நாள் நடைபெறும் ஆடி பெருக்கு விழாவின் முதல் நாளை இன்று தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உலகத்தின் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சுந்தரா ட்ராவல்ஸ் பேருந்தில் பயணம் செய்கிறார் அவர் என்ன செய்தார். அது ஒரு காமெடி பீஸ் தலையில் மைக் செட் மாட்டிக்கொண்டு அந்த உருவத்தை பார்ப்பதற்கே ஒரு காமெடி பீஸ் ஆக தெரிகிறது என பேசகனார்.
மேலும் அன்புமணி உரிமை மீட்போம் என சொல்கிறார். எதை மீட்க போகிறார் என்று தெரியவில்லை. தலைவர் ஜி.கே.மணிக்கு தான் தெரியும். எதை மீட்க போராடுகிறார். 100 ஆண்டு சாதனைனு, எண்ணத்தை செய்து கிழித்தார், என்னத்த செஞ்சிங்க, எவன் செய்தாலும், நாங்க தான் செய்தோம், நாங்க தான் செய்தோம் என்று சொல்வது.
இட ஒதுக்கீடு கேட்டு அவர்கள் போராடுவதோடு சரி. இன்றைய தினம் சட்டத்தை கொண்டு வந்தது திமுக. பாமக நிழல் பட்ஜெட் போட்டார்கள், நாங்கள் நிஜ பட்ஜெட்டை போட்டு ஆட்சி நடத்தினோம்.
விவசாயிகளுக்கு கொடுத்தோம். இவர்கள் இட ஒதுக்கீடுகள் கேட்டு போராட்டம் நடத்தி, பேருந்தை நிறுத்தினார்கள். மரத்தை வெட்டினார்கள். ஆனால் அப்போதைய அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் கண்டு கொள்ளவில்லை. ஆனால் யாரும் கேட்கவே இல்லை.
துப்பாக்கி சூடு நடத்தியதில் 21 பேர் உயிரிழந்தனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞர் ராமதாஸ், வீரபாண்டியாரை அழைத்து பேசி இட ஒதுக்கீடு கொடுத்தார்.
என்னவோ தெரியவில்லை. இப்ப சின்ன அய்யா(அன்புமணி) மக்கள் உரிமையை மீட்க போரேன் என்று சொல்கிறார். என்ன உரிமையை மீட்க போகிறார். அப்பாவிடம் கேட்க போகிறாரா?
அதிமுக பி டீம் எல்லாம் பயணம் செய்கிறார்கள். நீங்கள் என்னத்தை செய்தீர்கள், மக்கள் எங்களை அங்கீரித்தார்கள். நாங்கள் செய்தோம் என பேசினார். இந்த மேடையில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணியை மேடையில் வைத்துக் கொண்டே, பாமகவையும், அன்புமணியையும் கடுமையாக விமர்சித்தார்.
 
                        3 months ago
                                40
                    








                        English (US)  ·