சின்மயிக்கு தடை விதித்தது நானா? இஷ்டத்துக்குப் பேசக்கூடாது- பேட்டியில் பொங்கிய ராதாரவி…

3 months ago 33
ARTICLE AD BOX

சின்மயிக்கு தடை

2018 ஆம் ஆண்டு வைரமுத்து மீது “Me Too” புகாரை எழுப்பினார் சின்மயி. அதனை தொடர்ந்து வைரமுத்துவுக்கு திரைப்பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட இல்லாமலே போனது. மறுபக்கம் சின்மயி டப்பிங் யூனியனில் தடை செய்யப்பட்டார். அவர் சந்தா ஒழுங்காக கட்டவில்லை என்ற காரணத்தினால்தான் அவர் வெளியேற்றப்பட்டார் என அந்த சமயத்தில் டப்பிங் யூனியன் தலைவராக இருந்த ராதா ரவி கூறினார். 

அதுவரை பல நடிகைகளுக்கு பல திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுத்துவந்த நிலையில், அத்தடையை தொடர்ந்து சின்மயி தமிழில் பின்னணி குரல் கொடுப்பதும் நின்றுப்போனது. எனினும் நடுவில் “லியோ” திரைப்படத்தில் திரிஷாவிற்கு சின்மயியை பின்னணி குரல் கொடுக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ். 

radha ravi said that he did not ban chinmayi from singing

மேலும் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு சின்மயி தமிழ் திரைப்பாடல்கள் பாடுவதற்கும் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சின்மயி, “தக் லைஃப்” ஆடியோ வெளியீட்டு விழாவில் “முத்த மழை” பாடலை பாடியது அனைவரையும் கவர்ந்தது. ரசிகர்கள் பலரும், “சின்மயிக்கு போடப்பட்டிருக்கும் தடையை நீக்கவேண்டும்” என சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். சின்மயி பாடுவதற்கு தடை போட்டது நடிகர் ராதா ரவிதான் என்று கூறப்பட்ட நிலையில் அவரையும் கடுமையாக விமர்சித்தனர். 

சின்மயிக்கு நான் தடை போடவில்லை!

இந்த நிலையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவியிடம் சின்மயி பாடுவதற்கு தடை விதித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராதா ரவி, “சின்மயி பாடுவதற்கு தடை விதித்தது நான் அல்ல. நான் டப்பிங் யூனியனுக்கு மட்டுமே தலைவராக இருந்தேன். சின்மயி பாடுவதற்கு தடை விதித்தவர்கள் மியூசிக் யூனியன்தான்” என கூறியுள்ளார். 

radha ravi said that he did not ban chinmayi from singing

மேலும் பேசிய அவர், “டப்பிங் யூனியனுக்கும் மியூசிக் யூனியனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டப்பிங் யூனியன் வேறு மியூசிக் யூனியன் வேறு என்பது கூட தெரியாமல் சிலர் அவர்கள் இஷ்டத்திற்கு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நான் என்ன பதில் சொல்வது? சின்மயி பாடுவதற்கு தடை போடப்பட்டிருந்தால் அது ஏன் என்று மியூசிக் யூனியனிடம்தான் கேட்க வேண்டும்” எனவும் பதிலளித்துள்ளார்.  

  • radha ravi said that he did not ban chinmayi from singing சின்மயிக்கு தடை விதித்தது நானா? இஷ்டத்துக்குப் பேசக்கூடாது- பேட்டியில் பொங்கிய ராதாரவி…
  • Continue Reading

    Read Entire Article