ARTICLE AD BOX
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி?
வெற்றிமாறன், சிம்புவை வைத்து “வடசென்னை” பின்னணியில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான “வடசென்னை” திரைப்படத்தின் சில கதாபாத்திரங்களும் சில அம்சங்களும் சிம்பு படத்திலும் இடம்பெறவுள்ளது. ஆதலால் இத்திரைப்படம் “World of Vadachennai” என கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தின் புரொமோ வீடியோ ஒன்றை படமாக்கி வருகிறார் வெற்றிமாறன். இதனிடையே வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் ட்ராப் என செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் இது குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

தயாரிப்பாளரை அப்செட் ஆக்கிய சிம்பு?
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மூலமாக வரும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பங்கு என்ற அடிப்படையில்தான் சிம்பு இந்த படத்தில் ஒப்பந்தமானாராம். ஆனால் திடீரென சிம்பு தயாரிப்பாளர் தாணுவிடம் தனக்கு ரூ.45 கோடி சம்பளம் வேண்டும் என கேட்டாராம். சிம்பு இப்படி கேட்டதால் தயாரிப்பாளர் அப்செட் ஆகிவிட்டாராம்.

எனினும் தாணு ரூ.20 கோடி வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதற்கு சிம்பு ஒப்புக்கொள்ளவில்லையாம். இந்த இழுபறி காரணமாகத்தான் இத்திரைப்படம் டிராப் என்று வதந்திகள் பரவி வருகிறதாம். ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
