சிம்பு வேண்டாம்…SK போடுங்க…அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு.!

1 week ago 8
ARTICLE AD BOX

தேடி வந்த சிம்பு படம்…மாஸ் காட்டும் SK!

காமெடி மற்றும் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன்,அமரன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!

அமரன் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததால்,அவரது மார்க்கெட் அதிகரித்தது. இதனை தொடர்ந்து,அவர் பெரிய இயக்குநர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு,நாம் இணைந்து படம் பண்ணுவோம் என பேசும் நிலைக்கு சென்றுள்ளார்.

இவர் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராசி படத்தில் நடித்து வருகிறார்,மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த படத்தில் நடித்து வருகிறார்,பராசக்தி என்ற டைட்டில் வைத்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் “2018” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜேட் அந்தோணி ஜோசப்,சிம்புவிடம் ஒரு கதையை சொல்லி ஓகே செய்து வைத்திருந்தார்.

ஆனால்,அந்தக் கதையை ஏஜிஎஸ் நிறுவனம் கேட்டபோது,நம்மிடம் சிவகார்த்திகேயனின் கால்ஷீட் இருக்கிறது.அவருக்கே இந்தப் படம் செய்யலாம் என கூறியுள்ளனர்.இதனால், தற்போதுசிம்பு நடிக்க இருந்த படம் சிவகார்த்திகேயன் பக்கம் சென்றுள்ளது.இந்தப் படம் 2026 ஆம் ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.

  • Sivakarthikeyan vs Simbu movie சிம்பு வேண்டாம்…SK போடுங்க…அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு.!
  • Continue Reading

    Read Entire Article