சிம்புவிடம் அட்வான்ஸை திருப்பி கேட்கும் தயாரிப்பாளர்? அப்போ அந்த செய்தி உண்மைதானா?

5 hours ago 3
ARTICLE AD BOX

STR 49

சிலம்பரசன் நடிக்கும் 49 ஆவது திரைப்படத்தை Dawn Pictures ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாகவும் ராம்குமார் பாலகிருஷ்ணன் அத்திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் சிம்புக்கு ஜோடியாக கயாது லோஹர் நடிப்பதாகவும் இதில் காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. 

 Dawn Pictures asking simbu to return advance

ஆனால் இதனிடையே டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை வளையத்தில் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கிய நிலையில் சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. இதனை தொடர்ந்து தற்போது சிம்பு வெற்றிமாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

அட்வான்ஸை திருப்பிக்கொடுங்க

இந்த நிலையில் Dawn Pictures நிறுவனம் சிம்புவிடமும் சந்தானத்திடமும் கொடுத்த அட்வான்ஸை மீண்டும் திரும்ப கேட்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. “STR 49” திரைப்படம் தொடங்கிய சமயத்தில் இருவருக்குமே மிகப்பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்தார்களாம்.

அந்த தொகையை தற்போது அந்நிறுவனம் திரும்ப கேட்பதாக ஒரு தகவல் வெளியாகிறது.  இதன் மூலம் இத்திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதாக வெளிவந்த செய்திகள் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • Dawn Pictures asking simbu to return advance சிம்புவிடம் அட்வான்ஸை திருப்பி கேட்கும் தயாரிப்பாளர்? அப்போ அந்த செய்தி உண்மைதானா?
  • Continue Reading

    Read Entire Article