ARTICLE AD BOX
சினிமாவை விட எந்த சீரியல்கள்தான் இல்லத்தரசிகளின் ஃபேவரைட்டாக உள்ளது. காலை முதல் இரவு வரை பல இல்லத்தரசிகளை டிவி முன்பே உட்கார வைத்து விடுகிறது சீரியல்கள்.
அப்படி பல சீரியல்கள் டாப் கியரில் இருக்க, விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. குடிகாரனாக இருக்கும் ஹீரோவை திருமணம் செய்த பூ விற்கும் பெண் அவரை எப்படி திருத்துகிறார், மாமியார் மற்றும் கணவர் குடும்பத்தினரை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதைக்களம்.
இதில் பூ விற்கும் பெண்ணாக நடித்து வருபவர் கோமதி பிரியா, மதுரையை சேர்ந்த இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும், பிரபலமாக்கியது சிறகடிக்க ஆசை சீரியல்தான்.
மீனா கேரக்டரில் வாழ்ந்து வரும் கோமதி, தற்போது மலையாளத்திலும் சிறகடிக்க ஆசை சீரியலின் ரீமேக்கில் இவர்தான் மீனாவாக நடிக்கிறார்.
இந்த நிலையில் தான், மலையாள சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வருகிறார் கோமதி பிரியா, இருவருக்கும் விரைவில் திருமணம் என மலையாள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, கோமதி பிரியாவும் தனது இன்ஸ்டாகிராமில், திருமண கோலத்தில் போட்டோக்களை பதிவிட்டு நான் ரெடி, இது உண்மையான காதல் என பதிவிட்டு வருகிறார்.
விரைவில் தனது திருமணம் நடக்கும் நிலையில், கைவசம் சீரியல்கள் அதிகமாக உள்ளதால் அவர் சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

முக்கிய கதாபாத்திரம் விலகுவதால், அதற்கு ஏற்றார் போல முக்கிய நடிகை நடிக்க வேண்டும் என்பதால் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு இனியா சீரியலில் நடிக்க தாவிய ஆலியா மானசா மீண்டும் விஜய் டிவிக்கு திரும்புவதாகவும், மீனா கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் பழனியப்பன் மறுத்துள்ளார். ஆனால் கோமதி பிரியா இதை பற்றி வெளியில் எதுவும் கூறாமல் வெற்றி வசந்தை போல கமுக்கமாக உள்ளா என கூறப்படுகிறது.
