ARTICLE AD BOX
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் பள்ளி முடித்து நடந்து சென்ற 8 வயது சிறுமயை இளைஞா ஒருர் பின்தொடர்ந்து வாயை பொத்தி மாந்தோப்பிற்குள் தூக்கி கொண்டு பலாத்காரம் செய்தார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. 13 நாட்களாக குற்றவாளியை கண்டுபிடிக்காததால் போராட்டமும் வெடித்தன.
தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிய போலீஸ், இளைஞரை கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் என போலீஸ் அறிவித்தது. இதனிடையே நேற்று சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு நபர் சுற்றியுள்ளார்.
சிறுமியை வன்கொடுமை செய்த போது அணிந்த அதே உடையை அணிந்திருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது, அவனை பிடித்து போட்டோ எடுத்து சிறுமிக்கு காண்பித்துள்ளனர். அவரும் குற்றவாளியை உறுதி செய்ததால் அவன் கைது செய்யப்பட்டான்.
மேலும் அந்த நபரை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்திருந்து விடிய விடிய விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அவனை அழைத்து வந்த நிலையில் காவல் துறையினர் ஆந்திர மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வடமாநிலத்தவரின் தாபாவில் பணியாற்றியது தெரியவந்தது.
இதனால் போலீஸார் அந்த நபரை தாபாவுக்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை நடத்தினர். முதலில் தாபாவின் முன்பக்கம், பிறகு பின்பக்கம் என அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அந்த நபர் சனி, ஞாயிறுகளில் விடுமுறை எடுத்துக் கொண்டு ரயில் மூலம் ஆரம்பாக்கத்தில் சுற்றி திரிவது, நோட்டமிடுவது வழக்கமாக வைத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் ஆயுதம் உள்ளதா என குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
