ARTICLE AD BOX
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படியுங்க: 17 வயது சிறுவனுடன் வலுக்கட்டாயமாக உல்லாசம்… போக்சோவில் 32 வயது பெண் கைது!
கரூர் மாவட்டம், தென்னிலை மேல்பாகம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 49) கூலி வேலை செய்து வருகிறார்.
இவர், 11 வயது மற்றும் 9 வயதுடைய, இரண்டு சிறுமிகளுக்கு கடந்த மே மாதம் 24 ஆம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, சிறுமிகளின் தாய் கா.பரமத்தி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6 months ago
63









English (US) ·