சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை.. தேடிச் சென்ற வனத்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

1 week ago 12
ARTICLE AD BOX

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு உள்ள காளியம்மன் கோவில் அருகே தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மணோஜ்முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதியரின் மகள் ரோசினியை தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தூக்கிச் சென்றது.

இதையும் படியுங்க: இனியும் இபிஎஸ் பற்றி இழிவு செய்தால்.. அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை!

திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் குழந்தையின் தாய் அலறி அடித்துக் கொண்டு சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஓடி வந்து, குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த காவல் துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து தேடும் பணியில் இரவு முதல் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை வனத் துறை மற்றும் காவல் துறையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடும்படியில் தீவிரப்படுத்தி தேடி வந்தனர். இந்நிலையில் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள யூகலிப்டஸ் அடர்ந்த காடுகள் பகுதிக்கு சிறுமியை கவ்வி கொண்டு சென்ற சிறுத்தை, அங்கு குழந்தையை கொதறி தின்று சென்றது.

பல்வேறு இடங்களில் சிதறி கிடந்த சிறுமியின் உடல் பாகங்களை நீட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leopard that grabbed a girl... Shock awaited the forest department

சிறுமியின் தாய் நான்கு வயது என்று கூறிய நிலையில் குழந்தையின் வயது ஏழு என்பது ஆதார் கார்டு மூலம் தற்பொழுது உறுதி செய்யப்பட்டு உள்ளது. குழந்தையை சிறுத்தை தாக்கி கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

  • rajinikanth not participated in madurai murugan devotees conference மதுரை முருகன் மாநாட்டில் சூப்பர் ஸ்டார்? உறுதிப்படுத்திய ரஜினிகாந்த் தரப்பு?  
  • Continue Reading

    Read Entire Article