ARTICLE AD BOX

காலம் கலிகாலம் எனக் கூறுவது இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிறுவனுக்கு இந்த வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.
சிறுவனை ஆசை வார்த்தை கூறி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் பெண் ஒருவர். இது திருவள்ளூரில் நடந்துள்ளது.
பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டருகே 24 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார்.
அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அடிக்கடி பக்கத்துவீட்டு சிறுவனை பார்த்ததும் ஆசை துளிர்த்துள்ளது அந்த பெண்ணுக்கு.
இதையும் படியுங்க: மச்சான் மனைவியுடன் உல்லாசம்.. தங்கை கணவரை கண்டம்துண்டமாக வெட்டிய அண்ணன்!
இதனால் அந்த சிறுவனிடம் அடிக்கடி பேச்சுக்கொடுத்துள்ளார் அந்த பெண். மேலும் காதலிப்பதாக கூறி மாணவரின் மனதை கெடுத்துள்ளார்.
இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் வெளியூருக்கு மாணவரை அழைத்து சென்ற அந்த பெண், அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுவனை காணாமல் தவித்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் சிறுவனை கடத்தியது பக்கத்து வீட்டு பெண் என்பது தெரியவந்தது.

இதையடுத்து பதுங்கி இருந்தவர்களை கண்டுபிடித்த போலீசார், சிறுவனை மீட்டனர். 24 வயது இளம் பெண் அந்த சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததும் அம்பலமானது. இதையடுத்து அவரை போக்சோவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
The station சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பெண்… தமிழகத்தில் ஷாக் சம்பவம்! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.