சிறுவன் அன்புக்கரசின் அன்புக்கு கட்டுப்பட்ட தமிழக அரசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

2 weeks ago 22
ARTICLE AD BOX

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக ஆய்வக கட்டிடம் கட்டும் பணிகளை தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இதையும் படியுங்க: குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

அப்போது ஆத்திகுளத்தைச் சேர்ந்த சக்திகாளியம்மன் என்ற மாணவியிடம் பேசிய நிதிஅமைச்சர் ஆத்திகுளத்தில் இருந்து நடந்து பள்ளிக்கு வருகிறாயா, ரொம்ப சிரமமாக உள்ளதா என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று நிதியமைச்சரை சந்தித்த சிறுவன் நானும் ஆத்திகுளத்தில் இருந்து 2 கிலோமீட்டர் நடந்து தான் சார் பள்ளிக்கு வரேன் பஸ் வரல என்று நிதியமைச்சரிடம் தெரிவித்தான்.

Minister fulfills school student's request

சற்றும் எதிர்பார்க்காத நிதியமைச்சர் அந்த சிறுவனின் பெயரை கேட்டார். அன்புக்கரசு என்று சொன்னவுடன் உன்னுடைய அன்புக்கு கட்டுப்பட்டு உங்க ஊருக்கு முதல் பஸ் விட்டு உன்னை தான் முதலில் ஏற்றி விடுவோம் என்று கலகலப்பாக பேசினார்.

இந்த நிலையில் சிறுவன் அன்புக்கரசுவின் அன்புக்கு கட்டுப்பட்ட தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு இன்று அந்த சிறுவனின் கிராமத்திற்கு நேரடியாக சென்று சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக காரியாபட்டியில் இருந்து திருச்சுழி செல்லும் அரசு பேருந்தை ஆத்திகுளம் கிராமத்திற்கு டச்சிங் செய்து வர புதிய வழித்தடத்தில் பேருந்தை அந்த சிறுவனை வைத்து கொடியசைத்து துவக்கி வைத்து அழகு பார்த்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

பின்னர் பள்ளி மாணவர்கள் அனைவரும் அரசுப் பேருந்தில் ஏறி மகிழ்ந்தனர். இப்போது பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து நிதியமைச்சர் தங்கம்தென்னரசு பேருந்து இயக்க கோரிக்கை விடுத்த மாணவர் அன்புக்கரசுவை தனது மடியில் அமர வைத்து பேருந்தில் சிறிது தூரம் வரை பயணம் செய்து மகிழ்ந்தார்.

முன்னதாக நிதி அமைச்சரை பள்ளி மாணவர்கள் அனைவரும் ரோஜா பூ கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!
  • Continue Reading

    Read Entire Article