ARTICLE AD BOX
பாமகவில் சமீபகாலமாக தந்தை மகன் மோதல் முற்றி வருகிறது. ராமதாஸ்க்கு எதிராக அன்புமணி செய்லபாடு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: நிதி எல்லாம் எங்கே போகுது? கேலிக்கூத்தாக்கி இருக்கும் ஸ்டாலின் ஆட்சி : அண்ணாமலை அட்டாக்!
ஆனால் அன்புமணி இதை மறுத்தாலும், பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்கான புகார்களை கூறினார். தொடர்ந்து அன்புமணி மீது ராமதாஸ் புகார் வைத்து வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றத்தில் நிர்வாகிகள் உள்ளனர்.

இதனிடையே வேலூரில் பாமக நிர்வாகிகளால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனத்தை பெற்று வருகிறது. அதில், அய்யா அடையாளம் அதிகாரம், அய்யாதான் எல்லாம்
சிறை சென்றவனே தலைவன் என்று வசனத்தோடு
வேலூர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் தான் எல்லாமே கட்சியை உருவாக்கியவர் சிறைக்கு சென்றவர் அவர்தான் என்று கூறி, அன்புமணி புறக்கணித்து வேலூர் முழுவதும் ஆங்காங்கே ராமதாசுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த தடா பாஸ்கர், சிறைப்பறவை, தார்வழி பன்னீர் ஆகியோர் வேலூர் மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
