ARTICLE AD BOX
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் [54 ] இவர் அதே பகுதியில் சிறிய அளவிலான கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்
இதனிடையே குடியாத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து சிறுமியை குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது

இதனையடுத்து மருத்துவர்கள் மேல்பட்டி காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மேல்பட்டி காவல் துறையினர் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், குடியாத்தம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியது தெரியவந்தது.
இதனையடுத்து கஜேந்திரனை கைது செய்த மேல்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
