ARTICLE AD BOX
டாப் நடிகர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு அறிமுகமாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயது ரசிகர்களையும் தன் வசப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வருபவர்தான் சிவகார்த்திகேயன். “அமரன்” திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது “மதராஸி”, “பராசக்தி” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் “குட் நைட்” திரைப்பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக மோகன்லால் நடிக்கிறார் எனவும் ராஷ்மிகா மந்தனா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.
தள்ளிப்போன திரைப்படம்!
இந்த நிலையில் விநாயக் சந்திரசேகரனின் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பை கொஞ்சம் தள்ளிப்போட்டுக்கொள்ளலாம் என சிவகார்த்திகேயன் இயக்குனரிடம் கூறியதாக நேற்று ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் இன்று வேறு மாதிரியாக ஒரு தகவல் வெளிவருகிறது.
அதாவது மோகன்லாலின் கால்ஷீட் அடுத்த ஆண்டு மார்ச் மாதம்தான் கிடைக்கும் என்பது போல் ஒரு சூழல் உள்ளதாம். இதன் காரணத்தால்தான் இத்திரைப்படத்தை மார்ச் மாதத்திற்கு சிவகார்த்திகேயன் தள்ளிவைத்துள்ளாராம். இந்த இடைவெளியில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.