ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் அன்னை இல்லத்தின் பங்கு
திரையுலகில் தனக்கென தனி சிம்மாசனம் அமைத்துக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை ‘அன்னை இல்லம்’ என அழைக்கப்படும் தனது வீட்டில் கழித்தார்.தமிழ் சினிமாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் இங்கு நடைபெற்றிருக்கின்றன.
இதையும் படியுங்க: ஜிவி பேயை வைத்து திகில் காட்டினாரா..இல்லை கடுப்பேத்தினாரா..’கிங்ஸ்டன்’ பட விமர்சனம்!
1959 ஆம் ஆண்டு,சிவாஜி கணேசன் இந்த இல்லத்தை வாங்கியபோது, இரண்டு ஆண்டுகள் தேக்கு மரத்தால் அலங்காரம் செய்து,தனது தாயாரின் நினைவாக ‘அன்னை இல்லம்’ என்று பெயரிட்டார்.சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதையடுத்து,அந்த வீடு அமைந்திருந்த தெருவிற்கே ‘செவாலியே சிவாஜி கணேசன் சாலை’ என பெயர் மாற்றப்பட்டது.
தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றான ‘பாவை விளக்கு’ திரைப்படத்தின் முதல் காட்சி அன்னை இல்லத்தில் எடுக்கப்பட்டது. இதில் சிவாஜி தனது நண்பர்களுக்கு விளக்கமாக பேசும் காட்சியில் பின்னணியாக அன்னை இல்லம் காணப்படுகிறது.
அதேபோல்,’பாசமலர்’ படத்திலும் இந்த இல்லம் முக்கிய பங்கு வகிக்கிறது.சகோதர பாசத்தை பிரதிபலிக்கும் அந்த திரைப்படத்தில், சிவாஜி கணேசன்,தனது சகோதரி சாவித்திரியைப் பார்க்க வரும்போது, அவரை உள்ளே அனுமதிக்க மறுக்கும் வேதனைமிக்க காட்சியிலும் அன்னை இல்லம் இடம் பெற்றுள்ளது.
பந்த பாசம்,பார் மகளே பார்,தங்கப் பதக்கம்,திரிசூலம் போன்ற பல படங்களிலும் முக்கியமான காட்சிகள் அன்னை இல்லத்தில் படமாக்கப்பட்டுள்ளன. ‘ரத்த பாசம்’ திரைப்படத்தில்,காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சிவாஜி கணேசன்,மிடுக்காக நடைபோடும் காட்சியும் இங்கு எடுக்கப்பட்டது தான்.
அதேபோல் விஜய் நடித்த ‘தெறி’ படத்திலும் அன்னை இல்லம் முக்கிய இடமாக பயன்படுத்தப்பட்டது,வில்லன் மகேந்திரனின் வீடாக இந்த இல்லம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
கௌரவம்,கலாட்டா கல்யாணம்,திருடன் போன்ற படங்களின் முக்கியக் காட்சிகள் இந்த இல்லத்தில் இடம்பெற்றுள்ளன.பிரபு நடித்த ‘ராஜகுமாரன்’ திரைப்படத்திலும் சிவாஜியின் ஆசிர்வாதம் பெறும் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இந்த அன்னை இல்லத்தை தான் தற்போது நீதிமன்றம் ஜப்தி செய்ய உள்ளதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 months ago
78









English (US) ·