ARTICLE AD BOX
மாவீரன் இயக்குனர்
சிவகார்த்திகேயனை வைத்து “மாவீரன்” என்ற வித்தியாசமான படைப்பை கொடுத்த மடோன் அஷ்வின், அடுத்ததாக சீயான் விக்ரமை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் முன்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன. ஆனால் இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தை குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இரண்டாம் பாதி பிடிக்கவில்லை?
அதாவது இத்திரைப்படத்திற்காக எழுதப்பட்ட முழுக்கதையையும் கூறியபோது சீயான் விக்ரமிற்கு இரண்டாம் பாதியில் திருப்தி இல்லையாம். அதே போல் தயாரிப்பாளருக்கும் பிடிக்கவில்லையாம். இதனை தொடர்ந்து இரண்டாம் பாதியை மீண்டும் எழுதுவதற்காக மைசூர் சென்றிருக்கிறாராம் மடோன் அஷ்வின்.
ஒருவேளை அவர் எழுதிக்கொண்டிருக்கும் இரண்டாம் பாதிக்கான திரைக்கதை சீயான் விக்ரமிற்கும் தயாரிப்பாளருக்கும் பிடித்திருந்தால் இத்திரைப்படத்தை மடோன் அஷ்வின் இயக்குவார் இல்லை என்றால் அவர் இத்திரைப்படத்தில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.