ARTICLE AD BOX
மோஸ்ட எலிஜிபில் பேச்சுலர்
41 வயதாகியும் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் பேச்சுலர் நடிகராக வலம் வருபவர்தான் சிம்பு. இவரும் நயன்தாராவும் தொடக்கத்தில் காதலித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். அதனை தொடர்ந்து ஹன்சிகாவும் சிம்புவும் காதலித்து வந்தனர்.

அந்த காதலிலும் ஒரு கட்டத்தில் விரிசல் விழ அதன் பின் இப்போது வரை சிங்கிளாகவே வலம் வருகிறார் சிம்பு. இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகையான கோமதி பிரியா வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் சிம்புவும் கோமதி பிரியாவும் காதலித்து வருகிறார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
சிறகடிக்க ஆசை நடிகை
“சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் கோமதி பிரியா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மணப்பெண் அலங்காரத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு “விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி இங்கு ரெடி. கார்த்திக்கைதான் இன்னும் காணவில்லை” என ஒரு கேப்ஷன் போட்டிருந்தார்.

இந்த கேப்ஷனை கொண்டு நெட்டிசன்கள் பலரும் கோமதி பிரியா சிம்புவைதான் காதலிக்கிறாரா? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். எனினும் கோமதி பிரியா ஜாலிக்காகவே அந்த கேப்ஷனை போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
