சீறிய சிறுத்தைகள் சிறுத்துபோய் விட்டது : திருமாவளவன் மீது தமிழிசை காட்டம்.!!

7 months ago 85
ARTICLE AD BOX
Tamilisai

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: த.வெ.க. தலைவர் விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக்கொண்டுள்ளார். பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார்.

மேலும் படிக்க: மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட முயன்றவர்கள் கைது.. திருமண மண்டபத்தில் ஒரு புடி புடித்த பெரியார் அமைப்பு!!

சாயம் வெளுக்கிறதா? வேறொரு சாயத்தை பூசுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும். திராவிட கட்சி சாயலில் தமிழகத்தில் மற்றொரு கட்சி தேவை இல்லை. தேசிய சாயலில் தான் இன்னொரு கட்சி வர வேண்டும்.

எதிர்மறை அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் நேர்மறை அரசியல் தான் செய்கிறோம். தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் மதுவிலக்கு கொள்கையை பேசுவது ஏன்?

சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய் விட்டார். மாநாட்டில் திமுகவை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கை எப்படி பேசப்போகிறீர்கள்? என்ன கண்டனத்தை தெரிவிக்க போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

The station சீறிய சிறுத்தைகள் சிறுத்துபோய் விட்டது : திருமாவளவன் மீது தமிழிசை காட்டம்.!! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article