சுக்கு நூறாக உடைந்த கார்.. பிரபல நடிகரின் மனைவிக்கு ஷாக்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

3 months ago 38
ARTICLE AD BOX

பாலிவுட் நடிகர் சோனு சூட் மனைவி சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில், அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி சூட் கார் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். இதனால் அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து, மகாராஷ்டிரவின் மும்பை – நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. சோனாலி சூட் உடன் அவரது சகோதரி மற்றும் ஒரு உறவினர் ஒருவரும் காரில் இருந்துள்ளனர். மேலும், விபத்தில் சோனாலி சூட் மற்றும் அவரது சகோதரி படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி இரவு நடைபெற்றுள்ளது. தற்போது நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சோனாலி சூட் மற்றும் அவரது சகோதரியின் உடல்நிலை சீராக உள்ளது.

Sonali Sood Accident

இருப்பினும், படுகாயங்கள் காரணமாக அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடலில் உள்காயங்கள் எதுவும் இல்லை எனவும், இதனிடையே சோனாலி சூட் உறவினர் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் இல்ல அஜித்.. தட்டித்தூக்கிய பிரதீப்.. மனோஜ் மறைவால் தள்ளிவைத்த அப்டேட்!

இந்த நிலையில், “என்னுடைய மனைவி நலமாக உள்ளார். இந்த விபத்திலிருந்து அவர் தப்பியது அதிர்ஷ்டவசமானது. ஓம் சாய் ராம்” என தனியார் செய்தி ஊடகத்திடம் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

  • Sonali Sood Accident சுக்கு நூறாக உடைந்த கார்.. பிரபல நடிகரின் மனைவிக்கு ஷாக்.. அதிர்ச்சியில் திரையுலகம்!
  • Continue Reading

    Read Entire Article