ARTICLE AD BOX
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு – ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவியது.
இதையும் படியுங்க: அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது, அதில் தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநருர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கினர்.
ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேகத் சட்ட பல்கலைக்கழக மசோதா உட்பட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்தன.

இந்த தீர்ப்பை திமுக அரசு மற்றும் கூட்டணி கட்சிகள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து திமுகவின் ஆர்எஸ் பாரதி சும் போது, சுயமரியாதை இருந்தால் ஆளுநர் ரவி ஆளுநர் மாளிகையை விட்டு புறப்பட்டு போக வேண்டும் என காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.