ARTICLE AD BOX
சர்ச்சைக்கு பெயர் போன மிஷ்கின்
இயக்குனர் மிஷ்கின் எந்த மேடை நிகழ்ச்சிக்கு சென்றாலும் விவகாரமாக எதாவது பேசிவிடுவார். இதனால் பல சர்ச்சைகளும் எழுவது உண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஒரு திரைப்பட விழாவில் சில ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பேசியது கடும் எதிர்ப்புகளை கிளப்பியது. கடும் எதிர்ப்பிற்கு பிறகு இனி அது போன்ற வார்த்தைகள் பயபடுத்துவதை தவிர்த்துவிடுவதாக கூறினார்.
இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் தற்போது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் சீசன் 11 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார். இதில் இசையமைப்பாளர் தமன், அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன் ஆகியோரும் நடுவர்களாக பங்கேற்கின்றனர். இவர்களுடன் மிஷ்கினும் பங்கேற்கிறார். இந்த நிலையில் மிஷ்கின் சூப்பர் சிங்கர் படப்பிடிப்பில் செய்த அட்ராசிட்டீஸ் குறித்து ஒரு தகவலை பத்திரிக்கையாளர் அந்தணன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

செட்டில் அடாவடி!
“மிஷ்கினால் சூப்பர் சிங்கரின் மொத்த யூனிட்டுமே சோகத்தில் இருக்கின்றனர். நடுவருக்கான இருக்கையில் அவர் ஒழுங்காக உட்காரவில்லையாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி உட்கார்ந்திருந்தாராம். இதனால் எப்படி இவருக்கு Angle வைப்பது என கேமரா மேனே நொந்துப்போய்விட்டாராம். ஒரு கட்டத்தில் தொகுப்பாளினி பிரியங்காவே ‘சாருக்கு கேமரா Angle-ஏ வைக்க முடியாது, அந்தளவுக்கு உட்காருவார்’ என சூசகமாக போகிற போக்கில் கிண்டல் அடித்துவிட்டாராம்.
மேலும் போட்டியாளர்கள் பாடும்போது அவர்களுக்கு பின்னால் நடனமாடிய டான்சர்களில் ஒரு பெண்ணை பார்த்து, பிரமாதமாக ஆடியதாக பாராட்டினாராம். அந்த பெண் போன பிறகும் மீண்டும் அவரை அழைத்து வர சொல்லி அவரை பாராட்டினாராம். இது அங்கிருந்த அனைவருக்கும் தர்ம சங்கடமாக போய்விட்டதாம். இது பாடலுக்கான நிகழ்ச்சி, ஆனால் அவர் டான்சரை பாராட்டியிருக்கிறார். அந்த நடனமாடிய பெண்ணை பாராட்டி, டான்சர்ஸ் யூனியனில் தானே காசு கட்டி சேர்த்துவிடுவதாக அந்த பெண்ணிடம் கூறினாராம். இவரின் செய்கையில் நிகழ்ச்சியினுடைய நோக்கமே வேறெங்கோ சென்றுவிட்டதாம். இதனால் மொத்த யூனிட்டுமே சோகத்தில் உள்ளது” என மிஷ்கினின் அட்ராசிட்டி குறித்து அந்தணன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 11 ஆவது சீசன் வருகிற ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
