ARTICLE AD BOX
வாட்டர் மிலன் ஸ்டார்
கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கையில் தர்பூசணியை வைத்துக்கொண்டு கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்தான் திவாகர். தர்பூசணியால் ஃபேமஸ் ஆனதால் இவரை வாட்டர் மிலன் ஸ்டார் என்று பலரும் அழைக்கின்றனர். இவர் தொழில்ரீதியாக ஒரு பிசியோதெரபி டாக்டர் என்றாலும் சமீப காலமாக இன்ஸ்டாவில் பல ரீல்ஸ் செய்து தனது நவரசத்தையும் காட்டி மக்களை ரசிக்க வைத்து வருகிறார்.

இவர் எங்கு சென்றாலும் இவரை செல்ஃபி எடுக்க பல ரசிகர்கள் கூடிவிடுகின்றனர். இணையத்தில் இவரை பலர் ட்ரோல் செய்தாலும் தான் ஒரு மிகப்பெரிய நடிகர் என்ற நம்பிக்கையில் இருந்து இவர் சற்றும் விலகவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய திவாகர், நடிகர் சூரியை குறிப்பிட்டு “என்னால் அவரைப் போல் 500 1000க்கு எல்லாம் நடிக்க முடியாது. என்னுடைய லெவலே வேற” என பேசியிருந்தார்.
சூரியை விட பெரிய ஆளா நீ?
இந்த நிலையில் சமீபத்தில் திவாகர் பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதம் நடத்திய சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் திவாகரிடம், “சூரி மாதிரி கேரக்டர் எல்லாம் பண்ணமுடியாது என்று நீ பேட்டி கொடுத்தாய். சூரி பல வருடங்களாக கஷ்டப்பட்டு வந்தார். நீ என்ன கஷ்டப்பட்ட? 10 ரூபாய் தர்பூசணி வாங்கி ஃபேம்ஸ் ஆகிட்ட? சூரி சாப்புட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தவர். நீ நடிச்ச எதாவது படத்தை காட்டு பார்க்கலாம்” என ஒருவர் கேட்க,
அதற்கு திவாகர், “படத்தில் நடித்தால் மட்டுந்தான் நடிகரா? பள்ளி கல்லூரிகளில் நடித்தது எல்லாம்?” என கேட்க , அதற்கு அந்நபர், “பள்ளி கல்லூரிகளில் பலரும்தான் டிராமாவில் நடித்திருப்பார்கள். அவர்கள் எல்லாம் நடிகர் ஆகிவிட முடியுமா?” என பதிலுக்கு கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. திவாகரும் அந்நபரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.