சூர்யா VS கார்த்தி? அண்ணன் தம்பிக்குள் சண்டையை மூட்டிவிடும் லோகேஷ் கனகராஜ்? 

2 weeks ago 17
ARTICLE AD BOX

கைதி 2

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

“கூலி” திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த “கைதி 2” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இத்தகவலை ஆமிர்கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தினார். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸூக்குள் (LCU) இதற்கு முன் வெளியான “கைதி”  “விக்ரம்”, “லியோ” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அதன் வரிசையில் “கைதி 2” திரைப்படமும் LCU-ல் உருவாகவுள்ளது. 

சூர்யா VS கார்த்தி

“கைதி 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இத்திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாபாத்திரத்தில் சூர்யாவும் நடிக்க உள்ளாராம். 

அதாவது “விக்ரம்” திரைப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ செய்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை “கைதி 2” திரைப்படத்தில் வில்லனாக வடிவமைத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமல்லாது “கைதி 2” திரைப்படத்தில் கார்த்திக்கும் சூர்யாவுக்கும் இடையே அதிரடியான சண்டைக்காட்சி ஒன்றும் இடம்பெறவுள்ளதாம்.

suriya is the villain in kaithi 2 movie

சூர்யா கதாநாயகனாக நடித்த “கங்குவா” திரைப்படத்தில் கார்த்தி ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும்  “கைதி 2” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல் வெளிவருகிறது. 

“கைதி 2” திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ்  கனகராஜ் ஆமிர்கானை வைத்து பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • suriya is the villain in kaithi 2 movie சூர்யா VS கார்த்தி? அண்ணன் தம்பிக்குள் சண்டையை மூட்டிவிடும் லோகேஷ் கனகராஜ்? 
  • Continue Reading

    Read Entire Article