ARTICLE AD BOX
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி
கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், கருணாகரன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் சூர்யா, ஜோதிகா ஆகியோரும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. டீசரின் மூலம் இத்திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்ணாடி பூவே”, “கனிமா” போன்ற பாடல்கள் சிங்கிள்களாக வெளிவந்தது. இதில் “கனிமா” பாடல் டிரெண்டிங் பாடலாக ரசிகர்களிடம் வலம் வந்தது.
ஆடியோ வெளியீட்டில் ரஜினிகாந்த்
இந்த நிலையில் “ரெட்ரோ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருகிறார்களாம். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருகிறார்களாம். அது மட்டுமல்லாது “ரெட்ரோ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்களாம். ஆதலால் ரஜினிகாந்த் கலந்துகொள்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்பராஜ் ரஜினிகாந்தை வைத்து “பேட்ட” என்ற வெற்றித் திரைப்படத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

6 months ago
75









English (US) ·