சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

1 month ago 52
ARTICLE AD BOX

பிரம்மாண்ட விருந்து!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு ஒரு சிறப்பு விருந்தை கொடுத்துள்ளார்கள்.

இந்த விருந்தில் திரிஷா,ரம்யா கிருஷ்ணன்,ராதிகா சரத்குமார்,டிடி நீலகண்டன்,விஜே ரம்யா,நடன இயக்குனர் பிருந்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க: தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

சூர்யா – ஜோதிகாவின் வீட்டில் நடந்த இந்த விருந்து சமூகவலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.விருந்தினர்களுடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் மற்றும் விருந்தில் இருக்கும் பல காட்சிகள்,ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

விருந்தில் கலந்துகொண்ட நடிகைகள் அனைவரும் சூர்யா – ஜோதிகா தம்பதியின் அன்பும்,அவர்களின் விருந்தோம்பலும் மிக சிறப்பாக இருந்ததாக பாராட்டியுள்ளனர்.மேலும் அங்கு வழங்கப்பட்ட உணவின் ருசி அற்புதமாக இருந்தது என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த விருந்துக்கு முன்பு நடிகை திரிஷா தலையில் பூ வைத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “Love Always Wins” எனும் கேப்ஷனுடன் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.இதனால் அவரது ரசிகர்கள் “திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினர்.

திரிஷா சூர்யா – ஜோதிகா ஏற்பாடு செய்த விருந்தில் கலந்துகொண்டதால் “இந்த விருந்து திரிஷாவுக்காகவா?” என்பதும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

  • Suriya Jyothika Dinner Party சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!
  • Continue Reading

    Read Entire Article