சூர்யாவுக்காக வைத்திருந்த கதை! ஆமிர்கானுக்கு தூக்கி கொடுத்த லோகேஷ் கனகராஜ்? இதான் மேட்டரா?

3 weeks ago 36
ARTICLE AD BOX

லோகேஷ் கனகராஜ்-ஆமிர்கான் கூட்டணி

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர் ஆமிர்கானை வைத்து பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தன. ஆனால் இது குறித்து லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஆமிர்கான், “லோகேஷ் கனகராஜும் நானும் ஒரு படத்திற்காக தயாராகி வருகிறோம். இத்திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். மிகப் பெரிய பட்ஜெட்டில் இத்திரைப்படத்தை திட்டமிட்டு வருகிறோம். இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது” என கூறினார். 

இதன் மூலம் லோகேஷ் கனகராஜுடனான பிராஜெக்ட்டை உறுதி செய்துள்ளார் ஆமிர்கான். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ்-ஆமீர்கான் இணையும் திரைப்படத்தின் கதை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. 

இரும்புக்கை மாயாவி

காமிக்ஸ் உலகில் “இரும்புக்கை மாயாவி” ஒரு பிரபலமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரமாகும். இந்த கதாபாத்திரத்தை வைத்து சூர்யாவுக்காக ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் தயார் செய்து வைத்திருந்ததாக ஒரு செய்தி பல வருடங்களாக உலா வந்தன. 

lokesh kanagaraj direct aamir khan with suriya story

அந்த வகையில் தற்போது இந்த கதையில்தான் ஆமிர்கான் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதையில் ஆமிர்கான் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 

  • lokesh kanagaraj direct aamir khan with suriya story சூர்யாவுக்காக வைத்திருந்த கதை! ஆமிர்கானுக்கு தூக்கி கொடுத்த லோகேஷ் கனகராஜ்? இதான் மேட்டரா?
  • Continue Reading

    Read Entire Article