ARTICLE AD BOX
கங்குவா விமர்சனத்துக்கு பதிலடியா
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சூர்யா,இவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45 வது படத்தில் நடித்து வருகிறார்,இப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: காதலினா எப்படி இருக்கனும் தெரியுமா…நடிகர் சிம்பு கலக்கல் பேச்சு.!
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பிறகு வெளியானாலும்,அது பெரிதாக வசூலில் சாதனை படைக்கவில்லை,இப்படத்திலும் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

இந்த நிலையில் தற்போது சூர்யா,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து நடித்துள்ளார்,அதைத் தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியதோடு,வண்டலூரிலும் மற்றும் சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியிலும் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது,வக்கீல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில்,தற்போது அய்யனார் கதாபாத்திரம் என்ற ரோலிலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
