ARTICLE AD BOX
கனிமா…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் இத்திரைப்படத்தின் சிங்கிள் பாடலான “கனிமா” சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது. பலரும் இதில் இடம்பெற்ற பூஜா ஹெக்டேவின் நடனத்தை ரீல்ஸ் செய்து வைரலாக்கினர். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சூர்யாவை பார்த்தால் எப்படி தெரியுது!
இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் “ரெட்ரோ” ஆடியோ வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி பாவனா விஜய்யை குறித்து பேசியதாக தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். “ரெட்ரோ ஆடியோ வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி பாவனா பேசும்போது ஒரு வார்த்தையை விட்டார். அதனை பலரும் கவனிக்கவில்லை. ஆனால் எனக்கு திரும்ப திரும்ப அது ரிப்பீட் மோடிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது.

சூர்யாவை என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள், Screen-ல வர்ர ரீல் ஹீரோ என்று நினைத்தீர்களா? அவர் ஃபேமிலி மேன் ஆக வாழ்கிற ரியல் ஹீரோ என்று பாவனா பேசினார். அவர் சூர்யாவை பாராட்ட வேண்டும் என்றால் பாராட்டிவிட்டு போக வேண்டியதுதானே, எதற்கு இன்னொரு நடிகரை இதில் இழுக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இச்செய்தி விஜய் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.