சூர்யாவோட ஒரு படம் கூட ஹிட் அடிக்கல- ரசிகர்களை வாண்டடாக வம்பிழுத்த பிரபலம்!

1 month ago 38
ARTICLE AD BOX

சூர்யா படத்திற்கு வந்த எதிர்ப்பு

சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த “சூரரை போற்று”, 2021 ஆம் ஆண்டு வெளிவந்த “ஜெய் பீம்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. கொரோனா ஊரடங்கு காலகட்டம் என்பதால் இத்திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட முடிவு செய்தார் சூர்யா.

அந்த சமயத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் “சூர்யாவின் திரைப்படங்களை இனி திரையரங்குகளில் வெளியிட மாட்டோம்” என்று மிகவும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதனால் சூர்யா ரசிகர்கள் திருப்பூர் சுப்ரமணியத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். 

ஓடிடியில் வெளியான “சூரரை போற்று”, “ஜெய் பீம்” ஆகிய திரைப்படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதன் பின் சூர்யா நடித்து திரையரங்குகளில் வெளியான, “எதற்கும் துணிந்தவன்”, “கங்குவா” போன்ற திரைப்படங்கள் தோல்வியை தழுவின. சமீபத்தில் வெளியான “ரெட்ரோ” திரைப்படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது. 

ஒரு படம் கூட ஹிட் இல்லை..

tiruppur subramaniam challenge suriya fans that give me a name of one hit film of suriya after jai bhim

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட திருப்பூர் சுப்ரமணியம் “சூர்யா இரண்டு திரைப்படங்கள் ஓடிடிக்கு கொடுத்தார். இரண்டு திரைப்படங்களுமே ஹிட். ஆனால் அதன் பிறகு அவர் நடித்து திரையரங்கில் வெளியான எதாவது ஒரு படம் ஹிட் ஆனதா என்று சொல்லுங்கள். சூர்யா ரசிகர்களுக்கு நான் சவால் விடுகிறேன். அப்படி ஒரு படம் ஹிட் ஆனது என்று நீங்கள் சொன்னால் நான் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என்று ஆவேசமாக கூறினார். இவரது பேட்டி சூர்யா ரசிகர்களை மேலும் கோபமாக்கிவுள்ளது. 

  • tiruppur subramaniam challenge suriya fans that give me a name of one hit film of suriya after jai bhim சூர்யாவோட ஒரு படம் கூட ஹிட் அடிக்கல- ரசிகர்களை வாண்டடாக வம்பிழுத்த பிரபலம்!
  • Continue Reading

    Read Entire Article