ARTICLE AD BOX
வருகிற 19.20.21 தேதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பரப்புரை செய்ய உள்ளார்.
அதற்காக கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா வுடன் இணைந்து கூட்டத்தில் பங்கேற்க மாநில பாஜக துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சரோஜா சட்டமன்ற உறுப்பினர் பரமத்தி வேலூர் சேகர் மற்றும் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டமானது பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார் அப்போது
தோழமை கட்சிக்கு அழைப்பு விடுத்த நிலையில் இன்று இங்கு உரையாற்றிய வருகிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் வெவ்வேறு அணியாக இருந்தாலும் தற்போது வரும் தேர்லில் ஒரே அணியாக இணைய உள்ளோம். பாரத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி.
நாமக்கல் மாவட்டத்தில் பாஜக உடன் இணைந்து 6 சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெறுவோம். மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக மக்களை நாமக்கல் மாவட்டம் திரட்ட வேண்டும். இதன் தாக்கம் அடிமட்ட மக்களை ஈர்க்க வேண்டும். நாங்கள் வேறு இயக்கம் நாங்கள் வேறு இயக்கம் என வேறுபாடு இன்றி பணியாற்ற வேண்டும்.
2026ல் அதிமுக ஆட்சி அமையும். நீங்கள் எங்களுடன் ஏற்கனவே கூட்டணி வைக்க வேண்டும் என மக்கள் கூறி வருவதையும் இந்த ஆட்சி மீது வெறுப்பில் உள்ளனர். அதற்காக கூட்டணி சார்பில் நீங்கள் (பாஜக) பாடுபட வேண்டும் என கூறினார்.

இதனை அடுத்து பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் போது அதிமுக பாஜக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் இந்த பயணத்தை சிறப்பாக நடத்த உள்ளோம் .
தமிழக ஆட்சியில் போதை மாத்திரை மற்றும் சாராயம் ஆகியவற்றின் இருந்து தமிழகத்தை அகற்ற வேண்டும்.
செங்கோட்டையனை இயக்குவது யார் என்ற கேள்விக்கு, ஒவ்வொரு நபராக வெளியேற்றப்பட்டுள்ளனர் முதலில் முத்துசாமி உள்ளிட்ட பல அதிமுக தலைவர்கள் வெளியேறி உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு.
பாஜக தலைமை தெளிவாக உள்ளது எடப்பாடி பழனிசாமி தான் தமிழகத்தில் அடுத்த முதல்வர்,மக்கள் திமுக மீதும் ஸ்டாலின் மீதும் வெறுப்பில் உள்ளனர்.
பாஜக கட்சி செங்கோட்டையன் ஐ சந்திக்க தயாராக இல்லை என கூறினார்.
