ARTICLE AD BOX
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.
செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வித்யா குமார் மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படியுங்க: பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!
இதையடுத்து நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் உச்சநீதிமன்றம். இந்த நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்ற வாதத்தை ஏற்கிறோம், அதனால் செந்தில் பாலாஜிக்கு புதிய கட்டுப்பாடு தேவையில்லை என கூறியது.
ஆனால் செந்தில் பாலாஜிக்கு இனி எந்த அரசு பதவிகளும் வழங்கக்கூடாது, டெல்லி முதல்வர் தலைமை செயலகம் செல்லக்கூடாது என்ற உத்தரவை போல இவருக்கும் உத்தரவிட வேண்டும், கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட அதிகாரம் கிடையாது, பதவியா? ஜாமீனா? என்ற கேள்விக்கு பதில் அளித்துவிட்டோம், எனவே மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் அறிக்கையை ஏற்ற நீதிபதிகள், ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுக்களை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.