ARTICLE AD BOX
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சாராயம் விற்ற காசில் திமுக முப்பெரும் விழா நடத்தப்பட்டுள்ளது என கூறினார்.
செந்தில் பாலாஜியை அதிமுக ஆட்சி காலத்தில் திருடன் என பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது உலக மகா உத்தமர் என சான்றிதழ் கொடுக்கிறார்.
2026 தேர்தலுக்கு முன் மண் குதிரையை நம்பி முதலமைச்சர் ஸ்டாலின் காவிரி நோக்கி பயணிக்கிறார் என கூறினார்.
பாஜக குறித்து விமர்சனம் செய்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழகத்தில் திமுகவுக்கு எடுபிடியாக உள்ள கட்சி காங்கிரஸ் மட்டுமே. அந்த கட்சி பெயரை தமிழக எடுபிடி கட்சி என மாற்றிவிடலாம் என கூறினார்.
