ARTICLE AD BOX
பிரிமீயம் லீக் தொடர் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதில் 8 முதல் 10 அணிகள் லீக் சுற்றில் மோதி அதில் இறுதியில் வெல்பவர்கள் சாம்யினவர். அந்த வகையில் கடந்த ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமாக விளையாடி லீக் சுற்றிலேயே வெளியேறியது. இந்த நிலையில் வரும் போட்டிகளில் சென்னை அணியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைளை அந்த அணி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது
இந்த நிலையில் 30 வயதான இந்திய கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த அவர் கடந்த சீசனில் 9வது இடத்தி பிடித்தது பேசு பொருளானது.
குறிப்பாக காயம் காரணமாக ஐபிஎல்லில் சில போடடிகளில் சஞ்சு விளையாடாதது ஏமாற்றமாக இருந்தது. இதனிடையே ராஜஸ்தான் அணி நிர்வாகத்துடன் சஞ்சு சாம்சனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ராஜஸ்தான் அணியில் இருந்து விலகி சென்னை அணிக்காக சஞ்சு விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏலத்தில் டிரேடிங் முறையில் இவர் சென்னை அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. அதே போல சென்னை அணியில் உள்ள அஸ்வின் அல்லது துபே ராஜஸ்தான் அணிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை ராஜஸ்தான் அணி மறுத்து வந்தாலும், சென்னை அணி சஞ்சுவை தங்கள் அணியில் எடுக்க தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தோனி இன்னும் ஒரு சீசன் மட்டுமே விளையாடுவார் என்றும், அவரை தொடர்ந்து சஞ்சுவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
