ARTICLE AD BOX
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய் கடந்த மே ஒன்றாம் தேதி தனியார் விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வழியாக கொடைக்கானலுக்கு வந்தார்.
இதையும் படியுங்க: டாப்ஸ்லிப் பகுதிக்கு டிரெக்கிங் சென்ற மருத்துவர்… சடலமாக திரும்பி வந்த சோகம்!
கொடைக்கானலில் கடந்த இரண்டாம் தேதியில் இருந்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தாண்டிக்குடி முழுவதும் ரசிகர்கள் மற்றும் கட்சியினர் தொடர்ந்து நாளுக்கு நாள் விஜய் பார்ப்பதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் படப்பிடிப்பு முடிந்து விஜய் மீண்டும் தனியார் விடுதிக்கு செல்லும் வழியில் விஜய் சந்தித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக படப்பிடிப்பு முடிந்து மாலை தனியார் விடுதிக்கு விஜய் திரும்பும்போது ரோடு ஷோ நடத்தி பொதுமக்களிடம் மாலை, பூக்கள் உள்ளிட்டவைகளை வாங்கி ரசிகர்களுடன் ரோடு ஷோ நடத்தப்பட்ட நிலையில் இன்று காலை நடிகர் விஜய் சென்னைக்கு மீண்டும் திரும்பினார் .
இன்று காலையில் அவரை சந்திப்பதற்காக தனியார் விடுதிக்கு செல்லும் வழியில் உள்ள சாலையில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்திருந்தது.

ரசிகர்கள் பூக்கள் மற்றும் பரிசு பொருட்களை கையில் வைத்தவாறு காத்திருந்த நிலையில் திடீரென்று காரில் வெளியே வந்த விஜய் ரசிகர்களை சந்திக்காமல் காரில் அமர்ந்து சென்றது ரசிகர்களை பெறும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது .

மேலும் விஜயின் படப்பிடிப்பு நடைபெற்ற தனியார் தோட்ட பகுதிக்கு செல்லக்கூடிய வழிகளில் பலரும் விவசாயம் செய்து வரக்கூடிய நிலையில் கடந்த மூன்று நாட்களாக விஜயின் பவுன்சர்களால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும் விஜய் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே அந்த சாலைகளை முழுக்க ஆக்கிரமித்த விஜயின் பவுன்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் பவுன்சர்கள் விவசாயிகளை செல்ல விடாமல் தடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் கடந்த மூன்று நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்ற வந்த நிலையில் விஜய் இன்று மீண்டும் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
