சென்னையில் ரயிலை கவிழ்க்க மர்மநபர்கள் சதியா? பொன்னேரி ரயில் நிலையம் அருகே அதிர்ச்சி!

7 months ago 84
ARTICLE AD BOX
railway

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரெயில் நிலையம் அருகே கடந்த 4 நாட்களுக்கு முன் தண்டவாள இணைப்பு கம்பிகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொன்னேரி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிகாலை 2 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க: கல்லூரி மாணவர்கள் மட்டும் வீட்டுக்குள் ALLOWED.. ஜோராக நடந்த விபச்சாரம் : கும்பல் கைது!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். வடமாநிலங்களை இணைக்கும் சென்னை-கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் ரெயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதியா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவேறு சம்பவங்கள் குறித்தும் 2 தனிப்படைகள் அமைத்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The station சென்னையில் ரயிலை கவிழ்க்க மர்மநபர்கள் சதியா? பொன்னேரி ரயில் நிலையம் அருகே அதிர்ச்சி! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article